mardi 8 novembre 2022

தென்னங்கீற்று மாலை 2022

 அன்புடையீா,

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 17 வது தென்னங்கீற்று மாலை வரும் ஞாயிறு 13/11/2022 பிற்பகல் 3மணிக்கு ஆரம்பமாகின்றது. விபரங்களை கீழ் உள்ள அறிவித்தலைப் பார்க்கவும். பிரான்ஸ வாழ் புங்குடுதீவு மக்களை விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.
vendredi 5 août 2022

அறிவுத்திறன் போட்டி 2022


பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும் அறிவுத்திறன் போட்டி 11 வது தடவையாக எதிர் வரும் 02/10/2022 ஞாற்றுக்கிழமை, 50 Rue de Torcy,75018 Paris உள்ள மண்டபத்தில் காலை 9மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

போட்டிக்கான விண்ணப்ப படிவத்தினை Pungudutivu Makkal Ondriyam இணையத்
தளத்திலும் கபே பாரத்லும் (CAFÉ BHARATH, 67, RUE LOUIS BLANC, 75010-PARIS) பெற்றுக் கொள்ளலாம்.

இதில் பங்குபற்றும் மாணவர்கள் வரும் 29/09/2022ற்கு முதல் போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை படிவத்தில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

போட்டிக்கான விண்ணபபடிவம் பெற   <<<----- இங்கே அழுத்தவும்


திருக்குறள் போட்டிக்கான குறள்கள் கீழ்வரும் அதிகாரங்களில்  சொடுக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

திருக்குறள்(பாலர்பிரிவ)                   

         
அதிகாரம் 23 "ஈகை"                                               

திருக்குறள் (கீழ்ப்பிரிவு)


                             

jeudi 2 juin 2022


பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல்.


கீழ்வரும் முகவரியில் எமது ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அனைத்து நிர்வாக,ஒன்றிய உறுப்பினர்களையும் பங்குபற்றி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கு அன்போடு அழைக்கின்றோம். நன்றி.


 

samedi 19 décembre 2020

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நன்நீர்த்தேவைக்கான உதவிகள்.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பலவருடமாக செயற்படாமல் கிடந்த மழைநீர் சேகரிக்கும் தொட்டியினை புனர்த்தானம் செய்து தருவதாக பாடசாலைச் சமூகத்திடம் உறுதியளித்திருந்தோம். அந்தவகையில் அவ்வேலைத்திட்டத்தினை பின்வருமாறு செயற்படுத்தமாறு கேட்டிருந்தோம். இதனை பிரதேசசபை உறுப்பினரும் சமூக சேவையாளரும் சூழகம் அமைப்பின் தலைவருமான திரு நாவலன் கருணாகரன் ஊடாக மகாவித்தியாலய அதிபர் திரு கனகரெத்தினம் அவர்களின் ஒப்பிதலுடன் செயற்படுத்தினோம்.

       1. மகாவித்தியாலயத்தின் 2 மாடிக்கட்டிடத்தின் கூரை முழுவதற்கும்  Balance bord         அடித்து தரமான பீலி அமைப்பதென்றும். (அண்ணளவாக 90 மீட்டர் நீளம்) 

       2. புதிய மகிந்த ஆய்வுக்கூட கூரையினால் வரும் நீரினை  அருகில்        உள்ள கிணற்றுக்குள் செலுத்துவது. இதனால் கிணற்று நீா் சிறிதளவுகாலம் நன்னீராக நீடிக்கும் என்றும் காலப்போகிகில் நன்நீராக மாறலாம் என்னும் ஊகத்திலும் அதனையும் செயற்படுத்தக் கேட்டிருந்தோம்.

    3. ஏற்கனவே உள்ள தண்ணீத்தொட்டியினை புனரமைப்பது.

    4. புதிய நீர்த்தாங்கி அமைத்தல்.

     இதில் முதல் இரண்டும் 2019 ஆவணி மாதத்தில் ருபா 2,51,000 செலவில் முடிவடைந்தது.

     மற்றவை கோவிட் தாக்கத்தினால் நடைபெறவில்லை. தற்போது அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள்.

lundi 5 octobre 2020


எமது ஒன்றியம் சார்ந்து இக் கண்டன அறிக்கையினை பதிவிடுகின்றோம்.

 

samedi 11 avril 2020

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுக்கும் அறிவித்தல்.

            பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தனது நாளாந்த செயற்பாடுகளை தொடரமுடியாத நிலையை அடைந்துள்ளதை உறவுகள் அறிவீர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரான்சில் எமது மக்களிடையே ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு கூட எம்மால் அஞ்சலி செலுத்தவோ மலர் தூவி மரியாதை செலுத்தவோ முடியாத நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.

அந்த வகையில் அண்மையில் பிரான்ஸில் காலமான அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை,  அமரர் கந்தப்பு சோமசுந்தரம்,  அமரர் நவசிவாயம் கனகம்மா,  அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை  ஆகியோருக்கும் மற்றும் இதில் யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் அத்தனை அமரர்களுக்கும்  எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்தும் அதேநேரத்தில் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.

 இது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயங்கர சூழ்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களது மனத்தைரியத்துக்கும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். அவர்களது துயரத்தில் பங்கெடுக்க முடியாததையிட்டு எமது ஆழ்ந்த கவலையையும் மன்னிப்பையும் இத்தால் தெரியப்படுத்துகின்றோம்.       

நன்றி. 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ். 10/04/2020

lundi 6 avril 2020

மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள்ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தராசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள்

இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

நன்றி
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.