கடந்த சிலநாட்களாக தொடர்ந்து புங்குடுதீவில் நடைபெற்ற "அனைத்து தீவுப் பகுதிகளுக்குமான" விளையாட்டுப் போட்டியின் நேற்றைய இறுதிநாள் நிகழ்வு காலையில் பெய்த அடைமழை, காலநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது.
புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்று நடத்திய விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இதில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் தவிசாளா் திரு சின்னையா சிவராசா (போல்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை திரு.சின்னத்திரை லியோ ஆர்ம்ஸ்ராங் (புங்குடுதீவு தேவாலயப் பங்குத்தந்தை), பிரம்மஸ்ரீ முரளி சர்மா (பெத்தப்பா சிவன் ஆலயம்), திருமதி.சுலோசனா தனம் (புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றிய பொருளாளர்) உட்பட பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.