lundi 27 octobre 2014

vendredi 24 octobre 2014

(செய்திகள்& படங்கள்) புங்குடுதீவு "பாரதி விளையாட்டுக் கழக" விளையாட்டு போட்டி, நேற்றைய இறுதிநாள் நிகழ்வுகள்..!

கடந்த சிலநாட்களாக தொடர்ந்து புங்குடுதீவில் நடைபெற்ற "அனைத்து தீவுப் பகுதிகளுக்குமான" விளையாட்டுப் போட்டியின் நேற்றைய இறுதிநாள் நிகழ்வு காலையில் பெய்த அடைமழை, காலநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது.

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்று நடத்திய விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் தவிசாளா் திரு சின்னையா சிவராசா (போல்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை திரு.சின்னத்திரை லியோ ஆர்ம்ஸ்ராங் (புங்குடுதீவு தேவாலயப் பங்குத்தந்தை), பிரம்மஸ்ரீ முரளி சர்மா (பெத்தப்பா சிவன் ஆலயம்), திருமதி.சுலோசனா தனம் (புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றிய பொருளாளர்) உட்பட பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(படங்கள்) புங்குடுதீவில் "மீனவர்களின் வளர்ச்சிக்காக" இன்று "லயன்ஸ் கழகத்தால்" இடம்பெற்ற கருத்தமர்வு..!!

உலக வங்கியின் நிதியத்தில் "லயன்ஸ் கழகத்தால்" இன்று 24.10.14 வெள்ளிக்கிழமை, புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய கேட்போர் கூட மண்டபத்தில், புங்குடுதீவில் உள்ள மீனவர்களின் வளர்ச்சிக்காக இடம்பெற்ற கருத்தமர்வில் மதகுருமார், ஊர்பெரியவர்கள், மற்றும் பயனாளிகள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(படங்கள்) புங்குடுதீவில் "ஹரிதாஸ்" நிறுவனத்தின் உதவியில் அமைக்கப்பட்டு வரும், "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்"..!

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்,  ஹுதேக்  ஹரிதாஸ் (Hudec caritas)  நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்" ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.

பின்னர் ஹுதேக்  ஹரிதாஸ் -Hudec caritas - நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்" ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.