vendredi 24 octobre 2014

(செய்திகள்& படங்கள்) புங்குடுதீவு "பாரதி விளையாட்டுக் கழக" விளையாட்டு போட்டி, நேற்றைய இறுதிநாள் நிகழ்வுகள்..!

கடந்த சிலநாட்களாக தொடர்ந்து புங்குடுதீவில் நடைபெற்ற "அனைத்து தீவுப் பகுதிகளுக்குமான" விளையாட்டுப் போட்டியின் நேற்றைய இறுதிநாள் நிகழ்வு காலையில் பெய்த அடைமழை, காலநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது.

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்று நடத்திய விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் தவிசாளா் திரு சின்னையா சிவராசா (போல்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை திரு.சின்னத்திரை லியோ ஆர்ம்ஸ்ராங் (புங்குடுதீவு தேவாலயப் பங்குத்தந்தை), பிரம்மஸ்ரீ முரளி சர்மா (பெத்தப்பா சிவன் ஆலயம்), திருமதி.சுலோசனா தனம் (புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றிய பொருளாளர்) உட்பட பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.


***மேற்படி இறுதிநாள் நிகழ்வில் நிகழ்வின் பின்னர்...

முதலாமிடத்தை புங்குடுதீவு சங்கத்தாகேணி பிரதேசத்தை சேர்ந்த "சன்ஸ்ரார்" முதலாமிடத்தை வெற்றியீட்டியதுடன், முதலாம் இடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தையும், ஐயாயிரம் ரூபா பரிசினையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கான முதலாவது வெற்றிக் கிண்ணத்தையும், ஐயாயிரம் ரூபா பரிசுத் தொகையினையும், புங்குடுதீவை சேர்ந்த அமரர். கலாநிதி சரவணமுத்து சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக, தற்போது கொழும்பில் வதியும் அவரது மனைவி, பிள்ளைகள் &குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.

இரண்டாமிடத்தை புங்குடுதீவு கிழக்கு "நசரேத்" விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தை வெற்றியீட்டியதுடன், இரண்டாம் இடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கான இரண்டாவது வெற்றிக் கிண்ணத்தை, புங்குடுதீவை சேர்ந்த அமரர். சுந்தரம்பிள்ளை கமலாதேவி அவர்களின் ஞாபகார்த்தமாக, அவரது பிள்ளைகளான கனகசிங்கம் (கனடா), அருட்செல்வம் (சுவிஸ்) ஆகியோர் வழங்கி இருந்தனர்.

மூன்றாவது இடத்தை "காரைநகர் கலாநிதி" விளையாட்டுக் கழகம் மூன்றாவதிடத்தை வெற்றியீட்டியதுடன், மூன்றாம் இடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கான மூன்றாவது வெற்றிக் கிண்ணத்தை, புங்குடுதீவை சேர்ந்த அமரர். குட்டியன் மயில்வாகனம் அவர்களின் ஞாபகார்த்தமாக, அவரது மகன் வதனன் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.

"சிறந்த கோல் கீப்பருக்கான" பரிசினை "சன்ஸ்ரார்" கோல் கீப்பர் பெற்றுக் கொண்டார். இவருக்கான சிறப்புப் பரிசிலை புங்குடுதீவை சேர்ந்த அமரர். நடராசா கேசவன் அவர்களின் ஞாபகார்த்தமாக, புங்குடுதீவில் வதியும் அவரது மனைவி நடராசா சத்தியதேவி குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.

அத்துடன் இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப் பட்டதுடன், இச்சிறப்பு பரிசில்களையும், இவ்விளையாட்டுப் போட்டிக்கான முழுச்செலவையும் "புங்குடுதீவை சேர்ந்த அமரர். கலாநிதி சரவணமுத்து சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக", தற்போது கொழும்பில் வதியும் அவரது மனைவி, பிள்ளைகள் & குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.

புகைப்படங்கள் & தகவல்... திருமதி.சுலோசனா தனம் -புங்குடுதீவு.






















































Aucun commentaire:

Enregistrer un commentaire