samedi 27 décembre 2014

வெள்ளநிவாரண உதவி மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தினூடாக உதவிகள் செய்யப்பட்டதற்கான படங்கள்
வெள்ளஅனர்த்தங்களை படங்களில் பார்வையிட

samedi 20 décembre 2014

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்



பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு  அவர்கள் மட்டக்களப்பில் போரினால் பாதிப்படைந்து மீள்குடியேறிய வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35 குடும்பங்களுக்கான 12 குழாக்கிணறு அமைத்துக் கொடுப்பதற்கான நிதியுதவியினை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக உதவியதற்கு ஒன்றியம் சார்பில் இதயபூர்வமாகப் பாராட்டுகின்றோம்.மேலும் எமது இளையசமூகத்தினர் இவ்வாறான சமூகமுன்னேற்ற செயற்பாடுகளில் தங்களினால் இயன்ற உதவிகளை செய்து எமது மக்களை முன்னெற்றப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகின்றோம்.