lundi 7 décembre 2015

பிரதமவிருந்தினர் உரை 12வது தென்னங்கீற்று 25/10/2015

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 12வது தென்னங்கீற்று கலைவிழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு இலட்சுமணன் இளங்கோவன் அவர்களின் உரை.

samedi 7 novembre 2015

எமது கிராமத்தின் தற்போதய குடிமக்களின் பரம்பல்

எமது கிராமத்தின் மக்கள் பரம்பல் குடிமக்களின் எண்ணிக்கை பாடசாலைகள் நிா்வாக அலகுகள் என்பனவற்றை அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் அறிந்து கொள்ளுங்கள்

இணைப்பு:   எமது கிராமத்தின் தற்போதய குடிப்பரம்பல், நீர்நிலைகள், தொழில்கள்

mardi 27 octobre 2015

தென்னங்கீற்று 2015 நிழல் படங்கள்






25/10/2015 பிரான்சில் நடைபெற்ற எமது தென்னங்கீற்று 2015விழாவின் நிழல் படங்களை கீழ்காணும் தெடரில் கிளிக் செய்து பார்வையிடலாம்



jeudi 22 octobre 2015

தென்னங்கீற்று 2015

அன்புடையீர் எமது 12வது தென்னங்கீற்று பல கலைநிகழ்வுகளுடன் வரும் ஞாயிறு 25/10/2015 அன்று பி ப 1மணிக்கு 50 Place de Torcy, Paris 18 ல்உள்ள மண்டபத்தில் ஆரம்பிக்கின்றது
இதில் வடமாகாண ஆளுனரின் செயலாளரும எமது மண்ணின் மைந்தருமான திரு இலட்சுமணன் இளங்கோவன் பிரதமவருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்


dimanche 23 août 2015

தென்னங்கீற்று 2015

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -France 
வருடாந்தம் நடாத்தும் தென்னங்கீற்று கலைமாலை 12வது தடவையாக வரும் 25/10/2015 அன்று பாரிஸில் நடைபெறவுள்ளது 
இவ்விழாவிற்கு கலைநிகழ்ச்சிகளைத்தரவிரும்பும் புங்குடுதீவுக்கலைஞர்களை வரும் 30/09/2015க்கு முன்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

samedi 8 août 2015

மனிதாபிமான உதவி புங்குடுதீவு

கடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். அதில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தலைவர் வித்தியாவின் குடும்பத்திற்கு எமது ஒன்றியத்தின் சார்பில் அவர்களுக்கு ஓர் சிறு நிதியுதவியாக ரூபா ஒரு லட்சம் உதவுவதாக உறுதி அளித்திருந்தார்.
அத்துடன் அக்கண்டணக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவாகள் செல்வி வித்தியாவின் குடும்பத்திடம் தனது உதவியாக ரூபா ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்குமாறு கூறி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் கையளித்திருந்தார்.
மொத்தமாக இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபா 05/08/2015 அன்று வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக வேலனை பிரதேசசெயளாளர் முன்னிலையில் மாணவி வித்தியாவின் தாயாரிடம்வழங்கப்பட்டது.
வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டபடங்கள்




jeudi 30 juillet 2015

அஞ்சலிக்கூட்டம்

அன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும்  கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வரனின் அவர்கள் திடீர் மறைவினைவினையிட்டு நாம் எல்லோரும் மிகவும் கவலையடைந்தோம். அவரின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் தன்னிகரற்ர சேவையினையும் கருத்திற் கொண்டு எமது ஒன்றியத்தினால் வரும் 02/08/2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிமுதல் 5மணி வரை 50 rue de Torcy 75018 paris உள்ள மண்டபத்தில் ஓர் அஞசலி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

vendredi 5 juin 2015

முத்தமிழ் விழா 2015.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் 31/05/2015 அன்று நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவானது பல கலைநிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன்  இவ்விழாவின் முன்னோடி நிகழ்வாக நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மற்றும் நாவலர் குறும்படப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய குறும்படங்களுக்கும் அதில் தெரிவுக்குள்ளான படங்களின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பவியலாளர்களும் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் தென்இந்திய தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழும் திரு மிஷ்கின் அவர்கள் குறும்படத்தெரிவில் பிரதான நடுவராக பங்குபற்றியதுடன் விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்.  இவ்விழாவில் ஈழத்தில் இருந்தும் பல குறும்படங்கள் பங்குபற்றியதுடன் பரிசில்களைத் தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்

போட்டியில பங்குபற்றிய குறும்படங்கள்



தெரிவினுள் உள்வாங்கப்பட்ட குறும்படங்கள்




பரிசில்களைத் தட்டிக்கொண்ட கலைஞர்களும் படங்களும்

சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – அரபியா (எண்ணம்) - France

சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – சாருஜன் (காவோலை) - Sri Lanka

சிறந்த துணை நடிகை – இந்து (கருவறை தோழன்) - Sri Lanka

சிறந்த துணை நடிகர் – ஆனந்தன் (மன்னிப்பாயா) - France

சிறந்த நடிகர் – மதிசுதா (கருவறை தோழன்)- Sri Lanka

சிறந்த நடிகை  - யாழினி (கல்லுச்சாறி)- France

சிறந்த ஒலி வடிவமைப்பாளர்  - பொன் கேதாரன்  மற்றும்  பொன் தயா     ( பகடை) - France

சிறந்த VFX – யசிதரன் (Sucide)- Sri Lanka

சிறந்த கலை இயக்குனர் – மதிசுதா (கருவறை தோழன்)- Sri Lanka

சிறந்த இசை – வெரோன் (அறன்)- United Kingdom

சிறந்த படத்தொகுப்பு – மனஸ் ஸ்டீபன் (காவோலை)- Sri Lanka

சிறந்த திரைக்கதை – ரோய் (மன்னிப்பாயா)- France

சிறந்த ஒளிப்பதிவாளர் – எஸ்.எஸ்.ராய் (காவோலை) - Sri Lanka

சிறந்த இயக்குனர் – NS ஜனா (ஏன் இஞ்ச வந்தனி)- France

சிறந்த நடுவர் விருது - (Black Forest)- France

சிறந்த Concept விருது – (அறன்) - France

சிறந்த Critical விருது –  (வெள்ளம்)- Sri Lanka

சிறந்த குறும்படம் – (ஏன் இஞ்ச வந்தனி)- France



mercredi 27 mai 2015

முத்தமிழ்விழா 2015, ஞாயிறு 31/05/2015 பி ப 2மணி தொடக்கம் 21மணிவரை

அன்புடையீர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் நடத்தப்படும் முத்தமிழ்விழா பலகலைநிகழ்வுகளுடன், 28/02/2015 ல் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் பரிசில்களைத் தட்டிக்கொண்ட மாணவர்களுக்கும், குறும்படப்போட்டியில் பங்குபற்றி  வெற்றியினைத் தட்டிக்கொண்ட படங்களுக்கு்ம் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அனைவரையும் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இவ்விழாவில் இந்தியாவின் பிரபல இயக்குனர் திரு மிஷ்கின் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.


lundi 18 mai 2015

பிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்

பிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய மலர் அஞ்சலி செலுத்திப் பிராத்தித்தனர். இந்நிகழ்வில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் செல்வி வித்தியாவின் பெற்றோருக்கு ஒருலட்சம் ரூபா சிறு உதவியாக வழங்குவதாக ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன் அவர்கள் உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் நிழல்படங்களின் கொகுப்பு

dimanche 3 mai 2015

மனிதநேயத்தொண்டுப்பணியில் பிரான்ஸ்புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் சமூகபொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஊடாக ஓர் மாதிரி ஆடைஉற்பத்தி நிலையம் ஒன்றினை 1மில்லியன் இலங்கை நாணயத்தில் அமைப்பதற்கு ஆண்டு 2015ல் உதவி புரிந்திருந்தோம்.

இம் மாதிரி ஆடைஉற்பத்திநிலையம் 06/02/2015 திறக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இவ்வாடை உற்பத்திநிலையத்திற்கு அண்மையில் எமது ஒன்றியச் செயலாளர் சென்று வந்தபோது எடுத்து வந்த படங்களையும் அவர்களின் மாசிமாத திட்டமுன்னேற்ற அறிக்கையினையும் கீழ்காணப்படும் இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

dimanche 26 avril 2015

புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு விழா 21/04/2015




பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட சுற்றுமதில் கையளிப்பு விழா
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதில் 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக பாடசாலைச் சமூகத்தினாலும் புங்குடுதீவு மக்களினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமாகாண ஆளுனரின் செயளாளருமான திரு இ இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் திரு G V இராதாகிருஸ்ணன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு T ஜோன்குயின்ரஸ், வேலனைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொ சிவானந்தராசா, ஓய்வுநிலைப் போராசிரியர் திரு கா குகபாலன், ஆகியோரும், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, திரு இராசலிங்கம் தமிழ்மாறன், ஓய்வுநிலை வர்த்தகர் திரு சுப்ரமணியம் கோபாலபிள்ளை அவர்களும்,
மற்றும் வடஇலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொ ஜமுனாதேவி, ஓய்வுநிலை அதிபர் திரு ந தர்மபாலன், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி தனபாலன் சுலோசனா ஆகியோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் விருந்தினர்கள்  காலை 10 மணியளவில்  பாண்டு வாத்தியம் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப்பட்டு சுற்றுமதிலின் பெயர்ப்பலகையினை திரு சுப்பையா சஸ்பாநிதி அவர்களும் திரு இ இளங்கோவன் அவர்களும் இனைந்து திரைநீக்கம் செய்து நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் கேற்றினைத் திறந்து எல்லோரினையும் வரவேற்றார்.
மேலும் இவ்விழாவில் மங்கல விளக்கேற்றலுடன் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பனவும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை, வரவேற்புரையினைத் தொடர்ந்து கராத்தே காட்சி, பெண்களின் உதைபந்தாட்டப்போட்டி புங்/மகாவித்தியாலய அணியினருக்கும் நாவாந்துறை மகாவித்தியாலய அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கபடிப்போட்டி புங்/மகாவித்தியாலய மாணவர்களுக்கும் அச்செழு சைவப்பிரகாசவித்தியாலத்திற்கும் இடையில் நடைபெற்றது.
தொடர்ந்து தலைமையுரையினை பாடசாலை அதிபர் திரு ச கணேஸ்வரன் அவர்கள் பேசும்போது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்களை நன்றியுடன் பாராட்டி தற்போது யாழ்/நகரப்பாடசாலைகளில் 400மீட்டர் சுற்றளவு கொண்ட மைதானம் அமைக்கக் கூடிய விளையாட்டு மைதானத்தினை பாதுகாப்புடன் கொண்ட பாடசாலைகள் வரிசையில் புங்குடுதீவ மகாவித்தியாலயம் 2வதாக உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு நன்றியுரை கொடியிறக்கலுடன். இந்நிகழ்வில் பங்கேற்ற எல்லோருக்கும் சிற்றூண்டி மதியஉணவு குளிர்பானம் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது.

vendredi 13 mars 2015

அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 28/02/2015 அன்று நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி 2015 ன் முடிவுகள். இப்போட்டிகளில் தெரிவானவர்களுக்கு எமது ஒன்றியத்தினால் 6வது தடவையாக  31/05/2015 அன்று பிரான்சில் நடைபெறவுள்ள முத்தமிழ்விழாவில் பரிசளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகளை அறிவதற்கு கீழ் காணப்படும் அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள் என்பதில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்

அறிவுத்திறன் போட்டி 2015 முடிவுகள்


vendredi 27 février 2015

அறிவுத்திறன் போட்டி 2015

எமது வருடாந்த அறிவுத்திறன் போட்டி2015.   28-02-2015 சனிக்கிழமை 9மணிக்கு ஆரம்பமாகும்.
இடம்
50 Rue de Torcy, 75018 Paris
Métro: Marx dormoy
Ligne n°:12

samedi 7 février 2015

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் தையல் ஆடைத்தொழில்சாலை

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி தையல் ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச சார்பு நிறுவனமான « சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன் இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின் குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை 10ஆக உயர்த்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.
இத்திட்டத்திற்கான 70வீதம் நிதியுதவி முதலில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் அளிக்கப்பட்டு அதன் திறப்புவிழா 06-02-2015 கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் திறப்புவிழா படங்களையும் அதில் பணிபுரிபவர்களையும்  இங்கு படங்களில் காணலாம்