பிரான்ஸ்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம்
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின்
வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி தையல் ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச
சார்பு நிறுவனமான « சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன் இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி
அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின்
குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை
10ஆக உயர்த்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.
இத்திட்டத்திற்கான 70வீதம்
நிதியுதவி முதலில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் அளிக்கப்பட்டு
அதன் திறப்புவிழா 06-02-2015 கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில்
ஆரம்பிக்கப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire