mercredi 27 mai 2015

முத்தமிழ்விழா 2015, ஞாயிறு 31/05/2015 பி ப 2மணி தொடக்கம் 21மணிவரை

அன்புடையீர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் நடத்தப்படும் முத்தமிழ்விழா பலகலைநிகழ்வுகளுடன், 28/02/2015 ல் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் பரிசில்களைத் தட்டிக்கொண்ட மாணவர்களுக்கும், குறும்படப்போட்டியில் பங்குபற்றி  வெற்றியினைத் தட்டிக்கொண்ட படங்களுக்கு்ம் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அனைவரையும் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இவ்விழாவில் இந்தியாவின் பிரபல இயக்குனர் திரு மிஷ்கின் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.


lundi 18 mai 2015

பிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்

பிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய மலர் அஞ்சலி செலுத்திப் பிராத்தித்தனர். இந்நிகழ்வில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் செல்வி வித்தியாவின் பெற்றோருக்கு ஒருலட்சம் ரூபா சிறு உதவியாக வழங்குவதாக ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன் அவர்கள் உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் நிழல்படங்களின் கொகுப்பு

dimanche 3 mai 2015

மனிதநேயத்தொண்டுப்பணியில் பிரான்ஸ்புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் சமூகபொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஊடாக ஓர் மாதிரி ஆடைஉற்பத்தி நிலையம் ஒன்றினை 1மில்லியன் இலங்கை நாணயத்தில் அமைப்பதற்கு ஆண்டு 2015ல் உதவி புரிந்திருந்தோம்.

இம் மாதிரி ஆடைஉற்பத்திநிலையம் 06/02/2015 திறக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இவ்வாடை உற்பத்திநிலையத்திற்கு அண்மையில் எமது ஒன்றியச் செயலாளர் சென்று வந்தபோது எடுத்து வந்த படங்களையும் அவர்களின் மாசிமாத திட்டமுன்னேற்ற அறிக்கையினையும் கீழ்காணப்படும் இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.