பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் இலங்கையில் போரினால்
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில் கிளிநொச்சி
இரத்தினபுரம் கிராமத்தில் சமூகபொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஊடாக
ஓர் மாதிரி ஆடைஉற்பத்தி நிலையம் ஒன்றினை 1மில்லியன் இலங்கை நாணயத்தில் அமைப்பதற்கு
ஆண்டு 2015ல் உதவி புரிந்திருந்தோம்.
இம் மாதிரி ஆடைஉற்பத்திநிலையம் 06/02/2015 திறக்கப்பட்டு மிகவும்
சிறப்பாக இயங்கி வருகின்றது. இவ்வாடை உற்பத்திநிலையத்திற்கு அண்மையில் எமது
ஒன்றியச் செயலாளர் சென்று வந்தபோது எடுத்து வந்த படங்களையும் அவர்களின் மாசிமாத
திட்டமுன்னேற்ற அறிக்கையினையும் கீழ்காணப்படும் இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire