samedi 31 décembre 2016

புதுவருடவாழ்த்துக்கள் 2017

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும், எம்முடன் இணைந்து எமது உறவுகளின் சுபீட்சத்திற்காக உழைக்கும் அனைத்து உறவுகளுக்கும் பிறக்கும் புத்தாண்டு 2017 ஓர் இனிய ஆண்டாக மலரவேண்டி இறைவனை வேண்டுகின்றோம்.

நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

lundi 26 décembre 2016

அறிவுத்திறன் போட்டி 2019

அன்பான உறவுகளே!
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி 8வது ஆண்டாக 27/04/2019 நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும்.
சரியாக நிரப்பிய விண்ணப்பங்களை scan செய்து pungudutivu.fr@gmail.com எனும் e-mailக்கும் நீங்கள் அனுப்பலாம்

அறிவுத்திறன் போட்டி 2019 விண்ணப்பபடிவம் <<<<<<<<<<அழுத்தவும்


திருக்குறள்(பாலர்பிரிவ)                                                திருக்குறள் (கீழ்ப்பிரிவு)

அதிகாரம் 23,ஈகை,                                               அதிகாரம் 83 கூடாநட்பு

அதிகாரம் 24 புகழ்                                                அதிகாரம் 88 பகைத்திறன்தெரிதல்

அதிகாரம் 25 அருளுடைமை                            அதிகாரம் 89 உட்பகை

jeudi 22 décembre 2016

2016ம் ஆண்டிற்கான திட்டங்களின் செயற்பாட்டு முடிவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.

1.     புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள்
வித்தியாலய அதிபர் அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப்பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளரால் நேரடியாகச்சென்று  மதிப்பிடப்பட்ட 3 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாக்களுக்கன மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை எமது ஆதரவில் இயங்கும் தையலகத்தினூடாக செயற்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதனால் அதில் பணிபுரியும் மக்கள் நலமடைவதற்கு உதவுவதுடன் பாடசாலைக்கும் ஓர் உந்துதலை ஏற்படுத்தும் என எண்ணுகின்றோம்
Estimation: >>>>>Subramaniya vidyalayam

2.     புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்
   பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்  யா/ புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட மதிலின் இறுதி வேலைகள் வித்தியா மற்றும் அதிபரின் ழப்புக்களால் பின் தங்கியதாலும் சில அதிக வேலைகள் காரணமாகவும் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக கட்டிட ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு அவரது மேலதிக செலவுகளின் தரவு  அடிப்படையிலும்,  கருணை அடிப்படையிலும் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லாமாக இச்சுற்று மதிலுக்கு 6.6 மில்லியன் ரூபாக்கள் செலவளிக்கப்பட்டுள்ளது. இம்மதிலை பாதுகாப்பது அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்களின் கடமையாகும். இதன் பராமரிப்பே எம்மை மேலும் மேலும்  மக்களுக்காக செயலாற்றவும் மக்களின் ஆதரவைப்பெற்று மேலும் மேலும் பெரும் திட்டங்களை செய்யவும் உற்சாகப்படுத்தும்.


3.     புங்குடுதீவு வாணர்அரங்கு 
   வாணர் அவர்களின் நினைவாக புனரமைக்கப்படும் அரங்கு பற்றி வாத பிரதிவாதங்கள் இருந்தபோதும் அவருக்கு மதிப்பளித்தல் மற்றும் அவரை நினைவு கூரல் என்பதில் எமது ஊர் மக்களிடையே எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன்படி வாணர் அரங்க அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒரு மில்லியன் ரூபா உதவியளிப்பதாக அதன் நிர்வாகத்தினால் முடிவெடுக்கப்பட்டது. இதில்   அரைவாசி உடனடியாக அனுப்பி வைக்கப்படுமெனவும். மீதி அரங்கின் வளர்ச்சிப்போக்குக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும்  என்பதை இங்கு அறியத்தருகின்றோம்.
வாணர் அரங்கு திட்டத்தினை பார்ப்பதற்கு >>>>>வாணர்அரங்கு திட்டம்

4.     தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும்குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பு உதவி
    பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தாயகம் செக்டா (சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம்) அமைப்புடன் சேர்ந்து தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்புக்காக கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட  சிறு  ஆடைத்தொழிற்சாலையை தற்போது பளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் மற்றும் அதன் தொழில் நுட்பமுன்னேற்றத்துக்காகவும், இதே போல் கிழக்கு மாகாண மக்களுக்கும் உதவும் நோக்குடன் மட்டக்கிளப்பில் செக்டாவினால் நடத்தப்படும் ஆடைத்தொழிற்சாலையினை தொழில்நுட்பரீதியாக முன்னேற்றுவதற்காக செக்டாவால் விடுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை முன்னய எமது நிர்வாகக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு 5 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டடது என்பதனையும் இங்கு அறியத்தருகின்றோம். (கிளிநொச்சியில் இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி, பளை நகரம், பளை, கிளிநொச்சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து 2வது காணி)

              நன்றி.

              புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

dimanche 6 novembre 2016

பிரான்ஸ் தென்னங்கீற்று 2016 ஒளிப்படம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 13 வது தென்னங்கீற்று கலைமாலை ஒளிப்படம் பகுதி 1


பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 13 வது தென்னங்கீற்று கலைமாலை ஒளிப்படம் பகுதி 2


samedi 5 novembre 2016

2016 தென்னங்கீற்று நாடகம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 13வது தென்னங்கீற்று நிகழ்வில் அமோக வரவேற்பைப்பெற்ற நாடகம் "கோணல் மாணல்"


samedi 24 septembre 2016

தென்னங்கீற்று 2016

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த கலைநிகழ்வான தென்னங்கீற்று கலைவிழா வரும் 16//10/2016 அன்று பிற்பகல் 1மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கையில் இருந்து ஆடற்கலைச்செல்வி திருமதி ஜொசிட்டா ஹரால்ட் பீற்றர் கலந்து கொள்கின்றார். அத்துடன் அண்மையில் பிரான்சில் அரங்கேற்றம் கண்ட திரு பிரசாந், திரு வினோசாந் அவர்களின் வயலின் மிருதங்கம் இசைவிருதும் . தொடர்ந்து நாடகம் கோணல் மாணல், பரதநாட்டிய, மேலத்தேயநடன நிகழ்வுகளும் வேறுபல கலைநிகழ்வுகளும் உள்ளன.
அத்துடன் பிரதம விருந்தினராக திரு பஞசலிங்கதுரை லண்டனிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்

அன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து விழாவினைச்சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம் பிரவேசம் இலவசம். உங்களின் ஆதரவு எங்கள் கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

dimanche 7 août 2016

புதிய நிர்வாகம் 2016-2018


பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 2 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பொதுக்கூட்டமும் புதியநிர்வாகத் தெரிவும் 17/07/2016 ஞாயிறு அன்று பரிஸ் 18, 50 Rue de torcyல் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிகளவான புங்குடுதீவு மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன், செயலாளர் சுப்பையா சஸ்பாநிதி, பொருளாளர் திரு கந்தசாமி லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 2ஆண்டுகளுக்கான(2014-2016) தமது நிர்வாகத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி தமது அறிக்கைகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இவ்நிர்வாகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 2 வருட நிகழ்வுகளில் நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயற்பட்டு புங்குடுதீவு கிராமத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கும் பல திட்டங்களை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக புங்குடுதீவு மகாவித்தியால சுற்றுமதில், கிளிநொச்சி தையலகம் என்பன குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து நிர்வாகம் கலைந்து செல்ல மதிய உணவிற்குபின் ஒன்றியத்தின் அறங்காவலர்கள் தலைமையில் புதியநிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் 2ஆண்டுகளுக்கு (2016-2018) தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் ஒன்றியத்தின் மத்தியகுழு உறுப்பினர்களாக திரு தம்பிராசா சங்கரராசா, திரு தர்மலிங்கம் பாஸ்கரன், திரு கந்தசாமி லோகேஸ்வரன், திரு நாகராஜா செல்வகுமாரன் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.




mardi 28 juin 2016

பிரான்சில் வாழும் எமது ஊர் மைந்தனின் தாகம்

பாருங்கள் அவரின் முயற்சியினை வெற்றியடைய வாழ்த்துககள். விடாமுயற்சி உயற்சி அடையும்

dimanche 26 juin 2016

பொதுக்கூட்டமும் புதியநிர்வாகத் தேர்வும் 2016

அன்புடையீர்,
பிரான்ஸ் புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் 17/07/2016 ஞாயிறு பகல் 12 மணி மதியஉணவுடன் நடைபெறவுள்ளது. ஒன்றியத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு இன்றிமையானது எனவே எமது ஊரில் சிறப்பான அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கு ஓர் சிறந்த நிர்வாகத்தினை தெரிவு செய்து நீங்களும் அதில் பங்கு கொள்ளுங்கள்.
நன்றி
நிர்வாகம்

samedi 5 mars 2016

2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது  முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி"கெலன் ரெஜினா"(ஆசிரியை), அமரர் பொன்னம்மா கனகசபை(ஆசிரியை), அமரர் திருமேனிப்பிள்ளை இரத்தினசபாபதி (ஆசிரியை) ஆகியோரின் ஞாபகார்த்தமாக  27/02/2016 அன்று  நடாத்தப்பட்ட அறிவுத்திறன்போட்டி 2016 முடிவுகள்.
இதில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு 08/05/2016நடைபெறவிருக்கும் முத்தழிழ் விழாவில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள். முடிவுகளைப் பார்வையிடுவதற்கு கீழ்வரும் இணைப்பில் "கிளிக்" செய்யவும்

அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் passport size படம் "pungudutivu.fr@gmail.com" எனும் e-mail க்கு அனுப்பினால் அதனை எமது முத்தமிழ்விழா மலரில் பிரசுரிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.


2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்

mercredi 24 février 2016

எமது இளம் சமுதாயத்தின் இம்முயற்சி வெற்றியாக அமைய வாழ்த்துகின்றோம்

இவர்கள் முல்லைத்தீவு பாடசாலை ஒன்றிற்கு ஓர் தகவல் நிலையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இம்முயற்சியினை மேற்கத்திய தாளம் (western thalam) என்னும் கலைநிகழ்வினை 5 பல்கலைக்கழகமாணவர்கள் போட்டியாக நடத்துகின்றனர் நடத்துகின்றார்கள், எமத உறவுகள் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றார்கள்

இணைப்பினைப் பார்க்க: லண்டன் பல்கலைக்கழக மாணவர்களின் மேற்கத்திய தாளம்

mardi 19 janvier 2016

அறிவுத்திறன் போட்டி 2016

அன்புடையீர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி வரும் 27/02/2016 சனிக்கிழமை 50  Place de torcy, 75018 Paris. metro: Marx dormoy ல் அமைந்துள்ள Salle Jeanne d'Arc என்னும் மண்டபத்தில் காலை 8h30 லிருந்நு நடைபெறும். போட்டிக்கான விண்ணப்பபடிவததினை கீழ்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம், விண்ணப்ப முடிவுதிகதி 20/02/2016.

அறிவுத்திறன் 2016 விண்ணப்பபடிவம் பெறுவதற்கு