பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 2 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்
பொதுக்கூட்டமும் புதியநிர்வாகத் தெரிவும் 17/07/2016 ஞாயிறு அன்று பரிஸ் 18, 50 Rue de torcyல் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிகளவான புங்குடுதீவு மக்கள் கலந்து கொண்டது
குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன், செயலாளர் சுப்பையா சஸ்பாநிதி, பொருளாளர் திரு கந்தசாமி லோகேஸ்வரன் ஆகியோர்
கடந்த 2ஆண்டுகளுக்கான(2014-2016) தமது நிர்வாகத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி
தமது அறிக்கைகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இவ்நிர்வாகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 2 வருட நிகழ்வுகளில் நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயற்பட்டு புங்குடுதீவு
கிராமத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கும் பல திட்டங்களை நிறைவேற்றியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக புங்குடுதீவு மகாவித்தியால சுற்றுமதில், கிளிநொச்சி தையலகம் என்பன
குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து நிர்வாகம் கலைந்து செல்ல மதிய உணவிற்குபின் ஒன்றியத்தின்
அறங்காவலர்கள் தலைமையில் புதியநிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாக
உறுப்பினர்கள் 2ஆண்டுகளுக்கு (2016-2018) தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் ஒன்றியத்தின் மத்தியகுழு உறுப்பினர்களாக திரு தம்பிராசா சங்கரராசா, திரு தர்மலிங்கம் பாஸ்கரன், திரு கந்தசாமி லோகேஸ்வரன், திரு நாகராஜா செல்வகுமாரன் ஆகியோர்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire