புங்குடுதீவு மக்கள்
ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக
எடுக்கப்பட்ட முடிவுகள்.
1.
புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள்
வித்தியாலய அதிபர்
அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட
கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப்பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில்
இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளரால் நேரடியாகச்சென்று மதிப்பிடப்பட்ட 3
லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாக்களுக்கன
மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை எமது ஆதரவில் இயங்கும் தையலகத்தினூடாக செயற்படுத்துவதென
தீர்மானிக்கப்பட்டது. இதனால் அதில் பணிபுரியும் மக்கள் நலமடைவதற்கு உதவுவதுடன்
பாடசாலைக்கும் ஓர் உந்துதலை ஏற்படுத்தும் என எண்ணுகின்றோம்
Estimation: >>>>>Subramaniya vidyalayam
2. புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்
பிரான்ஸ் புங்குடுதீவு
மக்கள் ஒன்றியத்தால் யா/ புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட மதிலின் இறுதி வேலைகள் வித்தியா மற்றும் அதிபரின் இழப்புக்களால் பின்
தங்கியதாலும் சில அதிக வேலைகள் காரணமாகவும் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக கட்டிட ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு அவரது மேலதிக
செலவுகளின் தரவு அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் 5
லட்சத்து 32 ஆயிரம் ரூபாக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லாமாக
இச்சுற்று மதிலுக்கு 6.6 மில்லியன் ரூபாக்கள் செலவளிக்கப்பட்டுள்ளது. இம்மதிலை
பாதுகாப்பது அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்களின்
கடமையாகும். இதன் பராமரிப்பே எம்மை மேலும் மேலும் மக்களுக்காக செயலாற்றவும் மக்களின் ஆதரவைப்பெற்று மேலும் மேலும் பெரும் திட்டங்களை செய்யவும் உற்சாகப்படுத்தும்.
3. புங்குடுதீவு வாணர்அரங்கு
வாணர் அவர்களின்
நினைவாக புனரமைக்கப்படும் அரங்கு பற்றி வாத பிரதிவாதங்கள் இருந்தபோதும் அவருக்கு
மதிப்பளித்தல் மற்றும் அவரை நினைவு கூரல் என்பதில் எமது ஊர் மக்களிடையே எந்த
மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன்படி வாணர் அரங்க அமைப்பாளர்களின்
வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒரு மில்லியன் ரூபா
உதவியளிப்பதாக அதன் நிர்வாகத்தினால் முடிவெடுக்கப்பட்டது. இதில் அரைவாசி உடனடியாக அனுப்பி வைக்கப்படுமெனவும். மீதி அரங்கின்
வளர்ச்சிப்போக்குக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும் என்பதை இங்கு
அறியத்தருகின்றோம்.
4. தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும்குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பு உதவி
பிரான்ஸ் புங்குடுதீவு
மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தாயகம் செக்டா (சமூக பொருளாதார சிறுவர்
அபிவிருத்தி நிறுவனம்) அமைப்புடன் சேர்ந்து தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலமை
தாங்கும் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்புக்காக கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட சிறு ஆடைத்தொழிற்சாலையை தற்போது பளைக்கு மாற்றப்பட்டுள்ளது
என்பதனை அறியத்தருவதுடன் மற்றும் அதன் தொழில் நுட்பமுன்னேற்றத்துக்காகவும், இதே போல் கிழக்கு மாகாண மக்களுக்கும் உதவும் நோக்குடன் மட்டக்கிளப்பில்
செக்டாவினால் நடத்தப்படும் ஆடைத்தொழிற்சாலையினை தொழில்நுட்பரீதியாக
முன்னேற்றுவதற்காக செக்டாவால் விடுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை முன்னய
எமது நிர்வாகக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு 5 லட்சம் அனுப்பி
வைக்கப்பட்டடது என்பதனையும் இங்கு அறியத்தருகின்றோம். (கிளிநொச்சியில்
இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி,
பளை நகரம், பளை, கிளிநொச்சி
என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து
2வது காணி)
நன்றி.
புங்குடுதீவு மக்கள்
ஒன்றியம்