28/05/2017
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் இணைந்து நடாத்தும் 8வது முத்தமிழ்விழா நடைபெறும் திகதி
மாற்றம் விடயமாக இவ் அறிவித்தலை விடுக்கின்றோம்.
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர்
திரு அரியரெத்தினம் கனகசபை அவர்களின் சுகயீனம், அதனால் நேர்ந்த முத்தழிழ்
விழாவின் திகதி மாற்றம் மேலும்,
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்டப ஒழுங்கு
சிக்கல்களினாலும் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் விழாக்களுடன்
ஒத்துப்போதல் காரணமாகவும், இவ்வருட ஆடி ஆவணி
விடுமுறைக்காலத்தினையும் கருத்தில் கொண்டு நாம் எமது
8வது வருட முத்தழிழ் விழாவினை எமது தென்னங்கீற்று விழாவுடன் இணைத்து 22/10/2017
அன்று நடாத்துவதற்கு ஒன்றிய நிர்வாகம் முடிவு
எடுத்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
இத்திகதி மாற்றத்தினால் குறிப்பாக
குறும்படக்கலைஞர்களுக்கு எற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகின்றோம், அத்துடன் தங்களின் ஒத்துழைப்புகளையும் இத்திகதியில் விழா சிறப்பாக
நடைபெறவேண்டி குறும்பட தெரிவுக்கு தங்களின் ஆக்கங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி
15/10/2017 என்பதனையும் அறியத்தருகின்றோம்.
மற்றும் அறிவுத்திறன் போட்டியில் பங்குபெற்று வெற்றி
கொண்ட மாணவர்களின் பரிசளிப்பும் அன்று நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நன்றி.
நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.
28/05/2017