vendredi 28 décembre 2018

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்த அதிகளவு மழைவீழ்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுவாசல்கள் பாதிப்படைந்த நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளதினை நீங்கள் அறிவீர்கள்.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் களத்தில் நின்று உதவி வரும் IBC தமிழ் ஊடக நிலையத்தினூடாக ருபா மூன்று இலட்சம் (300000) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் புலன் பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகின்றோம்.
தாெடர்புடய பிரசுரம்

dimanche 4 novembre 2018

தென்னங்கீற்று கலைமாலை 2018

தென்னங்கீற்று கலைமாலை 2018, 14/10/208 அன்று வெகு விமரிசையாக பரிசில் நடைபெற்றது. அதன் நிழல் படங்களை கீழ்வரும் இணைப்பில் நீங்கள் பார்வையிடலாம். கலைநிகழ்ச்சிகளின் ஒளி ஒலி வடிவம் பின்னர் பதிவேற்றப்படும்.


தென்னங்கீற்று 2018/thennengeetru 2018   ⇐ படங்களைப் பார்வையிட 

samedi 29 septembre 2018

தென்னங்கீற்று மாலை 15

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும் தென்னங்கீற்று கலைமாலை 15  இவ்வருடம் 14/10/2018 அன்று ஞாயிறு 50 Rue Torcy 75018 Paris உள்ள மண்டபத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இந்நிகழ்வுக்கு கலை நிகழ்ச்ிகளைத் தர விரும்புவோர் எதிர்வரும் 07/10/2018க்கு முன் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும்


mardi 8 mai 2018

அறிவுத்திறன் போட்டி 2018 முடிவுகள்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 14/04/2018 அன்று நடைபெற்ற அறிவுத்திறன் போட்டி முடிவுகள் கீழ் வரும் இணைப்பில் பார்க்கவும்.
இப்போட்டிகளில் பரிசில்கள் பெறுபவர்களுக்கு வரும் ஐப்பசி மாதத்தில் எமது ஒன்றியத்தின் வருடாந்த தென்னங்கீற்று விழாவில் பரிசளித்து கௌரவிக்கப்படுவார்கள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

2018 அறிவுத்திறன் போட்டி முடிவுகள் ⇐⇐⇐ இங்கே அழுத்தவும்

mardi 6 mars 2018

அறிவுத்திறன் போட்டி 2018

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும் அறிவுத்திறன் போட்டி 9 வது தடவையாக எதிர் வரும் 14/04/2018 சனிக்கிழமை 50 Rue de Torcy,75018 Paris உள்ள மண்டபத்தில் காலை 10மணியிலிருந்து பிற்பகல் 6 மணிவரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இதில் பங்குபற்றும் மாணவர்கள் வரும் 10/04/2018ற்கு முதல் போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை படிவத்தில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

போட்டிக்கான விண்ணபபடிவம்   ← இங்கே அழுத்தவும்

dimanche 25 février 2018

புதிய நிர்வாகத்தேர்வு 2018/2020

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் 2018/2020 க்கான புதியநிர்வாகத்தேர்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பிரான்சில் தற்போதய கடுங்குளிரின் மத்தியிலும் இன்றய நிகழ்விற்கு 50க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது புதிய நிர்வாகத்தினைத் தேர்வு செய்திருந்னதனர்.

வரும் 2வருடத்திற்கான உறுப்பினர்களின் விபரங்களை கீழ்வரும் இணைப்பினை திறப்பதன் முலம் அறிந்து கொள்ளலாம்.

புதிய நிர்வாகத்தினர் 2018/2020

நிழல் படங்கள்

samedi 17 février 2018

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் 2018

அன்புடையீர்,

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் (2018-2020) வரும்25/02/2018 அன்று   50 Rue Torcy 75018 Paris  ல் அமைந்துள்ள மண்டபத்தில் பகல் 12 மணியிலிருந்துநடைபெறும் என்பதனை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு புங்குடுதீவு மக்கள் எல்லோரினையும் இவ் நிகழ்வில் பங்குபற்றி  வரும் 2 வருடத்திற்கான ஓர் சிறந்த நிர்வாகத்தினை தேர்வு செய்ய வேண்டுகின்றோம்

நன்றி
நிர்வாகத்தினர்.