samedi 11 avril 2020

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுக்கும் அறிவித்தல்.

            பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தனது நாளாந்த செயற்பாடுகளை தொடரமுடியாத நிலையை அடைந்துள்ளதை உறவுகள் அறிவீர்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரான்சில் எமது மக்களிடையே ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு கூட எம்மால் அஞ்சலி செலுத்தவோ மலர் தூவி மரியாதை செலுத்தவோ முடியாத நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.

அந்த வகையில் அண்மையில் பிரான்ஸில் காலமான அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை,  அமரர் கந்தப்பு சோமசுந்தரம்,  அமரர் நவசிவாயம் கனகம்மா,  அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை  ஆகியோருக்கும் மற்றும் இதில் யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் அத்தனை அமரர்களுக்கும்  எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்தும் அதேநேரத்தில் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.

 இது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயங்கர சூழ்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களது மனத்தைரியத்துக்கும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். அவர்களது துயரத்தில் பங்கெடுக்க முடியாததையிட்டு எமது ஆழ்ந்த கவலையையும் மன்னிப்பையும் இத்தால் தெரியப்படுத்துகின்றோம்.       

நன்றி. 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ். 10/04/2020

Aucun commentaire:

Enregistrer un commentaire