பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பலவருடமாக செயற்படாமல் கிடந்த மழைநீர் சேகரிக்கும் தொட்டியினை புனர்த்தானம் செய்து தருவதாக பாடசாலைச் சமூகத்திடம் உறுதியளித்திருந்தோம். அந்தவகையில் அவ்வேலைத்திட்டத்தினை பின்வருமாறு செயற்படுத்தமாறு கேட்டிருந்தோம். இதனை பிரதேசசபை உறுப்பினரும் சமூக சேவையாளரும் சூழகம் அமைப்பின் தலைவருமான திரு நாவலன் கருணாகரன் ஊடாக மகாவித்தியாலய அதிபர் திரு கனகரெத்தினம் அவர்களின் ஒப்பிதலுடன் செயற்படுத்தினோம்.
1. மகாவித்தியாலயத்தின் 2 மாடிக்கட்டிடத்தின் கூரை முழுவதற்கும் Balance bord அடித்து தரமான பீலி அமைப்பதென்றும். (அண்ணளவாக 90 மீட்டர் நீளம்)
2. புதிய மகிந்த ஆய்வுக்கூட கூரையினால் வரும் நீரினை அருகில் உள்ள கிணற்றுக்குள் செலுத்துவது. இதனால் கிணற்று நீா் சிறிதளவுகாலம் நன்னீராக நீடிக்கும் என்றும் காலப்போகிகில் நன்நீராக மாறலாம் என்னும் ஊகத்திலும் அதனையும் செயற்படுத்தக் கேட்டிருந்தோம்.
3. ஏற்கனவே உள்ள தண்ணீத்தொட்டியினை புனரமைப்பது.
4. புதிய நீர்த்தாங்கி அமைத்தல்.
இதில் முதல் இரண்டும் 2019 ஆவணி மாதத்தில் ருபா 2,51,000 செலவில் முடிவடைந்தது.
மற்றவை கோவிட் தாக்கத்தினால் நடைபெறவில்லை. தற்போது அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire