புங்குடுதீவு மண்ணின் மைந்தர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் மத்தியகுழு உறுப்பினர்
தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு) (கிருபா அண்ணர்) தேசியப்பற்றாளர் தொண்டர் அவர்கள் இயற்கை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மனம் உடைந்து துவண்டு நிற்கின்றோம்.
அரசியல் , குடும்ப உறவுகள், நண்பர்கள் என்பதற்கும் அப்பால் அவரை ஓர் தொண்டனாகவே பார்த்தோம்.
மண்மீதும், மக்கள் மீதும், அனைத்து உயிரினங்களையும் நேசித்த மாபெரும் தொண்டர்.
அவர்களின் இழப்பினால் துடித்து நிற்கும் அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளின் துன்பத்தில் பங்கெடுப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
நன்றி.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்