புங்குடுதீவு மக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு ஓர் அறிவிப்பு
புங்குடுதீவில் உள்ள குடிநீருக்கு உகந்த பொதுக் கிணறுகளை சுத்தம் செய்து பொது மக்களின் குடிநீர் பாவனைக்கு விடும் செயற்பாடுகளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலில் அங்கு வாழும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 9 நன்னீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.
(இதற்காக உதவி (வாட்டப்பம்)செய்த அமரர் திரு நா.இராசலிங்கம் அவர்களின் மகனுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்
சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்)
ஊரில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அவசர நடவடிக்கையாக இது தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தமக்கருகில் தமது நன்னீர் தேவைக்கு பாவிக்க முடியாது கிடக்கும் கிணறுகளை எமக்கு அறியத்தந்தால் அவற்றையும் உடனடியாக எம்மால் முடிந்தளவு சிறப்பாக சுத்தம் செய்து உங்கள் பாவனைக்கு விட முடியும். இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பொறுப்பேற்கும். உங்களுக்கு தெரிந்த பொது கிணறு குடிநீர் அல்லது குளிக்கிற கிணறு தூர் வாரும் பணியை செய்து கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 0772669902 MR தம்பா.
நன்றி
நிர்வாகம்
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.