vendredi 17 mars 2023

அறிவுத்திறன் பாேட்டி 2023

பிரான்ஸ்  புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடம் தாேறும் நடத்தும் அறிவுத்திறன் பாேட்டி நிகழ்வுகள் இவ்வருடம் 01/05/2023 திங்கள் கிழமை பாரிஸ் சாேதியா கலைக்கல்லூரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றாேம். இதில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் வரும் 27/04/2023ற்கு முன்னர் கீழ்வரும் இணைப்பில் காணப்படும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் காணப்படும் வினாக்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டிக்காெள்கின்றாேம்.

 

விண்ணப்ப படிவத்தினைப் பெற்றுக்காெள்ள கீழ்காணும் இணைப்பில் அழுத்தவும்

>>>>>>>>>>>>>>>>விண்ணப்ப படிவம்<<<<<<<<<<<<<<<

mercredi 15 mars 2023

புதியநிர்வாகம் 2023/2025

 பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் 26/02/2023 அன்று சோதியா கலைக்கல்லூரியில்  நடைபெற்று 2023/2025 க்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய நிர்வாகத்தினர் தங்களின் 2018-2022 காலப்பகுதியில் தாங்கள் ஆற்றிய செயற்பாடுகளை எடுத்துரைத்து தங்கள் கடந்த கால நிகழ்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். தங்களின் காலத்தில் கோவிட் தாக்கத்தினால் 2020/2021 காலப்பகுதியில் எதுவித ஒன்றுகூடல்கள் விழாக்களை நடத்த முடியாதிருந்ததனையும் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேநீர்  இடைவேளைக்குப்பின் புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட  புதிய உறுப்பினர்களை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

புதிய நிர்வாக உறுப்பினர்கள்

தொடர்ந்து புதிய உறுப்பினர்களின் அறிமுக உரையும், தொடர்ந்து நன்றியுரையுடன்  கூட்டம் இனிதே முடிவுற்றது.

நிழல் படங்கள்