mercredi 15 mars 2023

புதியநிர்வாகம் 2023/2025

 பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் 26/02/2023 அன்று சோதியா கலைக்கல்லூரியில்  நடைபெற்று 2023/2025 க்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய நிர்வாகத்தினர் தங்களின் 2018-2022 காலப்பகுதியில் தாங்கள் ஆற்றிய செயற்பாடுகளை எடுத்துரைத்து தங்கள் கடந்த கால நிகழ்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். தங்களின் காலத்தில் கோவிட் தாக்கத்தினால் 2020/2021 காலப்பகுதியில் எதுவித ஒன்றுகூடல்கள் விழாக்களை நடத்த முடியாதிருந்ததனையும் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேநீர்  இடைவேளைக்குப்பின் புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட  புதிய உறுப்பினர்களை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

புதிய நிர்வாக உறுப்பினர்கள்

தொடர்ந்து புதிய உறுப்பினர்களின் அறிமுக உரையும், தொடர்ந்து நன்றியுரையுடன்  கூட்டம் இனிதே முடிவுற்றது.

நிழல் படங்கள்






 

Aucun commentaire:

Enregistrer un commentaire