vendredi 26 mai 2023

திறன் வகுப்பு உபகரணங்கள் உதவி


புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலயத்திற்கான திறன்வகுப்பு ஒன்றினை அப்பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இதன் போது ஒன்றியம் திறன்வகுப்புக்கான வகுப்பறையினை புனரமைத்து முற்றுமுழுதாக அதனுள் மழைகாலத்தில் தூவானம் உள்செல்ல முடியாதவாறு அதன் கட்டமைப்பினை முற்றாக வலயக்கல்வி உத்தியோகத்தினரின் அறிவுரைக்கமைய புனரமைத்து அதற்கான திறன்வகுப்பு உபகரணங்களும் கொடுத்து உதவியுள்ளனர்.

 👉👉பாடசாலை அதிபரின் நன்றிக்கடிதம்

வகுப்பறையின் முன்னைய நிலையும் புனரமைப்பின் பின் உள்ள நிலையும் படங்களில்


 

 திறன் உபகரணங்களுடன் வகுப்பறை



 

 

 

 




 

 

அத்துடன் பாடசாலையின் மழைநீர் சேகரிப்பு பீலிகளும் அதன் தாங்கு பலகையும் சிதைவடைந்து உடைந்திருந்ததினால் அதனையும் புதிதாக அமைத்துக் கொடுத்திருந்தோம்.




 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்காக புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 1.4மில்லியன் ரூபாவினைச் செலவிட்டிருந்தது. இதனைச் செயற்பட உதவிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும், இதற்கான பணத்தினை எங்களின் வேண்டுகோளிற் கிணங்க பகுதி பகுதியாகக் கொடுத்துதவிய சர்வோதய நிர்வாகத்தினருக்கும், இவ் வேலைகளினை மேற்பார்வை செய்து செயற்படுத்திய பாடசாலை அதிபர் திரு கிருபாகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

தகவல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

lundi 15 mai 2023

அறிவுத்திறன் பாேட்டி 2023 முடிவுகள்

 எமது ஒன்றியத்தினால் 01/05/2023 அன்று நடத்தப்பட்ட அறிவுத்திறன் பாேட்டியில் பங்குபற்றி பரிசில்களைப்  பெறும் மாணவர்களின் விபரங்கள் அறிவதற்கு கீழ்க்காணும் இணைப்பில் அழுத்தவும்.

👉👉👉அறிவுத்திறன் 2023ல் பரிசில்களைப் பெறுவாேர் விபரம்

இவர்களுக்கான பரிசில்கள் தென்னங்கீற்று 2023ல் வழங்கிக் கெளரவிக்கப்படும்