vendredi 26 mai 2023

திறன் வகுப்பு உபகரணங்கள் உதவி


புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலயத்திற்கான திறன்வகுப்பு ஒன்றினை அப்பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இதன் போது ஒன்றியம் திறன்வகுப்புக்கான வகுப்பறையினை புனரமைத்து முற்றுமுழுதாக அதனுள் மழைகாலத்தில் தூவானம் உள்செல்ல முடியாதவாறு அதன் கட்டமைப்பினை முற்றாக வலயக்கல்வி உத்தியோகத்தினரின் அறிவுரைக்கமைய புனரமைத்து அதற்கான திறன்வகுப்பு உபகரணங்களும் கொடுத்து உதவியுள்ளனர்.

வகுப்பறையின் முன்னைய நிலையும் புனரமைப்பின் பின் உள்ள நிலையும் படங்களில்


 

 திறன் உபகரணங்களுடன் வகுப்பறை



 

 

 

 




 

 

அத்துடன் பாடசாலையின் மழைநீர் சேகரிப்பு பீலிகளும் அதன் தாங்கு பலகையும் சிதைவடைந்து உடைந்திருந்ததினால் அதனையும் புதிதாக அமைத்துக் கொடுத்திருந்தோம்.




 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்காக புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 1.4மில்லியன் ரூபாவினைச் செலவிட்டிருந்தது. இதனைச் செயற்பட உதவிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும், இதற்கான பணத்தினை எங்களின் வேண்டுகோளிற் கிணங்க பகுதி பகுதியாகக் கொடுத்துதவிய சர்வோதய நிர்வாகத்தினருக்கும், இவ் வேலைகளினை மேற்பார்வை செய்து செயற்படுத்திய பாடசாலை அதிபர் திரு கிருபாகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

தகவல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Aucun commentaire:

Enregistrer un commentaire