புங்குடுதீவு சுப்ரமணிய மகளிர் வித்தியாலயத்திற்கு அதன் அதிபர் திருமதி V. Arudselvan ,அவர்கள் தஙகள் பாடசாலைக்கு ஓர் நிழல் பிரதி இயந்திரம் ஒன்று தேவையாக உள்ளதாக சமூகவலையத்தளத்தினூடாக அறிவித்திருந்தார். அவரின் வேண்டுதலினை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ரூபா 170000மதிப்புடைய ஓர் நிழல் பிரதி இயந்திரம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.
2020
1. மகாவித்தியாலய GCE O/L மாணவர்களுக்கான மதிய உணவு
புங்குடுதீவு மகாவித்தியாலய படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் காேவிட் தாக்கத்தினால் பலவகுப்புக்கள் நடத்தப்படவில்லை இதனால் அவர்களுக்கு பிரத்தியாேக வகுப்புக்ள் எடுப்பதற்காக 31 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி உதவுமாறு அதிபர் செல்வி சுபந்தினி அவர்களின் வேண்டு காேளினை ஏற்று அவர்களுக்கு அவர்களின் பரீட்சை வரையுள்ள காலமான 2020 மார்கழி, 2021 தை,2021 மாசி ஆகிய 3 மாதங்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் மதிய உணவு வழங்கப்பட்டது.
2. புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை முன்னிட்டு 2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடியாக அதனை செய்து கொடுப்பது என்று முடிவெடுத்து அதற்காக எமக்கு கிடைத்த 3 மதிப்பீடுகளில் மற்றும் விலை என்பனவற்றை கவனத்தில் எடுத்து அதன் மதிப்பீடான 7.35 லட்சம் ரூபாய்களை ஒன்றியம் ஏற்று அதனைச் செயற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான கொடுப்பனவுகளை சர்வோதய நிர்வாகத்தின. உதவியுடன் முன்னெடுக்கின்றோம்.
3. வெள்ளநிவாரண உதவி
2020ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவு நலன்புரிச்சங்க வேண்டுகாேழுக்கு இணங்க 500 நுளம்பு வலைக்காக ரூபா 262000ரூபாவினை நலன்புரிச்சங்கத்தினூடாக வழங்கியிருதாேம்
2019
1. மகாவித்தியாலயம் நீர்த்தேவையினக் கருத்திற்காெண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளாேம் அதனை கீழ் வரும் இணைப்பில் அழுத்துவதன் மூலம் அறியலாம்
👉👉👉மகாவித்தியாலய நன்னீர்த்திட்டம்
👉👉👉1வருடத்தின் பின் அதிபரின் கருத்து
2 . 2018 ஆண்டு பருவமழையினால் வடமாகாணத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரண உதவி IBC யினூடாக
3. தாெழில் முயற்சியினை ஊக்கிவிப்பதற்கான உதவி
புங்குடுதீவு 12 வட்டாரத்தினைச் சேர்ந்த திரு தனபாலன் சுலாேசனாம்பிகை அவர்கள் அட்சயபாத்திர அன்னையர் கழகம் என்னும் பெயரில் பாடசாலைகளுக்கு உணவுதயாரித்து வழங்கிவந்தார். அவர் தங்களுக்கு ஓர் பசுமாடு வாங்குவதற்கு வட்டியில்லாத கடனாக ரூபா இரண்டு லட்சம் உதவி செய்யுமாறு ஒன்றியத்திடம் காேரினார்.
இதனை பரிசீலித்த ஒன்றியம் அவரின்தாெழில் முயற்சியினை ஊக்கிவிப்பதற்கா ரூபா இரண்டு இலட்சம் கடனாக வழங்கியிருந்தனர்.
2018
2016
2015
புங்குடுதீவு மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவிற்கான நிதியுதவி
புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்
- எமது ஒன்றியத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட விளையாட்டு மைதானம் உட்பட்ட சுற்றுமதில் ஆனது 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது அதன்போது புங்குடுதீவு வாழ் கல்வியாளர்கள் அறிஞர்கள், சமூகநலன்விரும்பிகள் என அதிகளவு மக்கள் இத்திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்தனர். பிரான்சில் இருந்து ஒன்றியச் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, முன்னாள் கொழும்பு வர்த்தகர் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை, திரு தமிழ்மாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- இச்சுற்றுமதிலினை அமைத்துக் கொடுப்பதற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவுமக்கள் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இதுவரை ரூபா அறுபது லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரம் ரூபா (6062000ருபா) வழங்கியுள்ளனர்.
- மேலும் சில மேலதிக வேலை இருப்பதால் மொத்த செலவு தொகை பின்னர் விபரமாக அறிவிக்கப்படும்
- சுற்றுமதில் கையளிப்பு நிழல் படங்கள் <<<<<< clic on to find the detail
முன்பள்ளிகளுக்கான உதவிகள்
- 2015ம் ஆண்டு நாம் தொடர்ந்து 10முன்பள்ளிகளின் 12 ஆசிரியர்களுக்கும் நிர்வாகச்செலவிற்குமாக ரூபா ஐந்து லட்சத்தி இருபத்தி நான்காயிரம் (524000) புங்குடுதீவு வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக கொடுத்து செயற்படுத்தி இருந்தோம். அதன் விபரத்தினை அதன் கீழ் வரும் இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- இவ்முன்முள்ளி ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 2009ம் ஆண்டில் இருந்து உதவி வருகின்றது தற்போத இவ் முன்பள்ளிகளில் கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு வேலனைப்பிரதேச கல்வித்திணைக்கழகத்தினால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதால் நாம் 2015 மார்கழியில் இருந்து எமது கொடுப்பனவுகளை நிறுத்த கின்றோம். 2009ம் ஆண்டில் இருந்து 2015 உட்பட எமது ஒன்றியம் ரூபாநாற்பத்தி ஒரு இலட்சத்தி எண்பத்தி எட்டாயிரம் உதவியுள்ளோம். (4,188,000ரூபா)
- முன்பள்ளிக் கொடுப்பனவு 2008-2015 <<<<<< clic on to find the detail
- முன்பள்ளிகள்
2014
- இவ்வருடம் தொடர்ந்து முன்பள்ளிகளுக்கான உதவி எமது ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்றது. 10 முன்பள்ளிகள் எமது ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைபெறுகின்றது. இவ் 10 முன்பள்ளிகளிலும் 13ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர் அதன் விபரத்தினை நீங்கள் கீழே காணலாம். இதற்காக எமது ஒன்றியம் இலங்கை ரூபாவில் 516000 வழங்கியுள்ளோம் மேலும் விபரங்கள் அறிவதற்கு
- தொடர்ந்து 2வது மிகப்பெரிய திட்டமாக புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு அதன் விளையாட்டு மைதானம் உள்ளடங்கலாக சுற்றுமதில் அமைத்துக்கொடுப்பதற்கு எமது ஒன்றியம் முடிவெடுத்து அதனை செயற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு இலங்கை ரூபாவில் 5600000ஆகும். (ஐம்பத்தியாறு லட்சம்). இதனைச் செயற்படுத்துவதின் மூலம் எமது பாடசாலையின் தரம் உயர்வதுடன் எமது பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைபாட செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என எண்ணுகின்றோம்.
- தொடர்புடைய பிரசுரம்
2013
- இவ்வருடம் முன்பள்ளிகளின் எண்ணிக்கை 10 ஆககஇ குறைந்து இருந்ததுடன் மாணவர்களின் எண்ணிக்கை 145. இவ் 10முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான வேதனமும், அதன் நிர்வாகச் செலவுக்குமாக ரூபா 480,000யும் வருடமுடிவில் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையாக 114,000ரூபாவும் குழந்தைகளுக்கான காலணி, சீருடைக்கு 160,000ரூபாவும் வழங்கியிருந்தோம்,
- ஆசிரியாகளுக்கா ஊக்குவிப்புக் கொடுப்பனவு படங்களில்
- மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கள்
- போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுமுகமாக கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் 1வருட மின்சாரத்தேவையின் ஒருபகுதியாக ரூபா 500000 வழங்கியிருந்தோம்.
தொடர்ந்து இவ்வருடமும் 12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, 15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் 222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழங்கப்பட்டது.

படங்களில் பார்க்கஒன்றியத்தின் உதவிகள் வன்னியில் 2011
- தொண்டர் திருநாவுக்கரசு முன்பள்ளி புங்குடுதீவு 3 மாணவர் எண்ணிக்கை 60 ஆசிரியர் 3.
- சிவலைப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 19 ஆசிரியர் 3
- இறுப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
- ஐங்கரன் முன்பள்ளி புங்குடுதீவு 6 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
- கலைவாணி முன்பள்ளி புங்குடுதீவு 5 மாணவர் எண்ணிக்கை 8 ஆசிரியர் 1
- நசரேத் முன்பள்ளி புங்குடுதீவு 12 மாணவர் எண்ணிக்கை 15 ஆசிரியர் 1
- மாதர்சங்கமுன்பள்ளி புங்குடுதீவு 10 மாணவர் எண்ணிக்கை 23 ஆசிரியர் 1
- சர்வமதசங்க முன்பள்ளி புங்குடுதீவு 9 மாணவர் எண்ணிக்கை 20 ஆசிரியர் 2
- பாரதி முன்பள்ளி புங்குடுதீவு 11 மாணவர் எண்ணிக்கை 26 ஆசிரியர் 1
- காந்திமுன்பள்ளி புங்குடுதீவு 04 மாணவர் எண்ணிக்கை 16 ஆசிரியர் 1
- மடத்துவளி முன்பள்ளி புங்குடுதீவு 7 மாணவர் எண்ணிக்கை 12 ஆசிரியர் 1
Aucun commentaire:
Enregistrer un commentaire