Projects Vanni



பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்த அதிகளவு மழைவீழ்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுவாசல்கள் பாதிப்படைந்த நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளதினை நீங்கள் அறிவீர்கள்.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் களத்தில் நின்று உதவி வரும் IBC தமிழ் ஊடக நிலையத்தினூடாக ருபா மூன்று இலட்சம் (300000) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் புலன் பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகின்றோம்.



2015-2016

தொடர்ந்து கிளிநொச்சி தையலகத்தினை தொழில்நுட்பரீதியில் முன்னேற்றுவதற்காகவும், மட்டக்களப்பில் செக்டாவினால் செயற்படுத்தப்படு்ம் தையலகத்தினை தொழில்நுட்பரீதியாக முன்னகர்த்துவதற்காகவும் எமது ஒன்றியத்தினால் ரூபா பத்து லட்சம் (1000000.00) உதவுவதாக முடிவெடுக்கப்பட்டு ரூபா ஐந்து லட்சம் செக்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

2014
இவ்வருடம் நாம் வன்னிக்கும் மட்டக்களபிற்கும் உதவியிருந்தோம்.
வன்னியில் நாம் ஓர் கைத்தொழில் முயற்சியினை ஏற்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்னும் நோக்கில் ஓர் தையலகம் ஒன்றினை ரூபா 10 31000 ரூபா செலவில் (1மில்லியன்) செக்டா அமைப்புடன் சேர்ந்து உருவாக்கினோம்.
அதன் விபரத்தினை கீழ்கானும் இணைப்பில் பார்க்கலாம்

மட்டக்களப்பில் ஆனந்தபுரம் கிராமத்தில் உள்ள 35 குடுமபங்களுக்கு 12 குழாய்க்கிணறுகளை அமைத்துக் கொடுத்திருந்தோம்
அதன் வபரத்தினை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்
ஆனந்தபுரம் குழாய்க்கிணறுகள்


வெள்ளநிவாரண உதவி மட்டக்களப்பு கீழ்காணும் இணைப்பில் பார்க்கவும்
வெள்ளநிவாரண உதவி மட்டக்களப்பு

2013

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத்தின் மின்சாரக்கட்டணம் அவர்களினால் செலுத்தமுடியாது இருளில் முழ்கியபோது  அதற்கான மின்சாரக்கட்டணத்தின் ஒரு பகுதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 500000 (ஐந்து லட்சம்) வழங்கப்பட்டது.

அதற்கான வேண்டுதலும் பற்றுச்சீட்டினையும் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்

வேண்டுதலும் பற்றுச்சீட்டும்



2011


போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு Father திரு A F தியாளநேசன் ஊடாக ரூபா 200000 (இரண்டு லட்சம்)  அவரினால் பரிந்துரைக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கு அவர்களின் சுயதொழில் முயற்சிக்காக பகிர்ந்தளித்திருந்தோம்.
அவர்களின் விபரம்






























Aucun commentaire:

Enregistrer un commentaire